பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கவியின் கனவு சர்வா : சர்வா ஊர்வசி: சர்வா ஊர்வ சர்வr கோலவண்டு யாழைமீட்டும் கவிகொட்டும் வானம்பாடி! சித்திரையில் ரதிமதனன் சிலைபாயும் ஐங்கணையும் சுத்திவரும் ஊர்வசியின் சுடர்விழியின் மந்திரமாம். (அரண்மனைச் சோலையில், மாலை நேரத்தில் ராணி ஊர்வசி ஊஞ்சல்பில் அமர்ந்து பாடி ஆடுகிறான். அச்சமயம் சர்வாதிகாரி அங்கு வருகிறான்) கண்ணாடிக் கண்ணிஉனைக் கண்டதுமே எனதுமனம் விண்ணாடிச் செல்லுதடி வேதங்கள் காணுதடி மண்ணாடும் மான்விழியே மயிலாடும் ஒயிலாலே திண்டாடித் தெய்வமெலாம் தெருவெல்லாம் அலைந்திடுமாம் (சிரித்து) ஏது, அரசி ஊர்வசி அம்மையாரின் மகிழ்ச்சி, ஆனந்தத்தின் எல்லையையே எட்டிப் பிடித்து விட்டது போலிருக்கிறதே...? நான் சகலகலாவல்லி! நான் சர்வாதிகாரி! நான் சர்வாலங்காரி நீ அலங்காரி என்பதை வரவேற்கிறேன் அரசி என்பதை வாழ்த்துகிறேன். ஆனால், என் எழிலரசி' அலங்காரியாக இருந்து என் ஆத்மாவை அலங் கோலப்படுத்தும் நீ, அரசியாகும்போது அடிக்கடி என்னை விட்டு விலகிப் போய் விடுகிறாயே, ராணி! -