பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 21 யிலும் - நிரூபித்துப் பாதுகாப்பதே வாழும் வழி என்கிறார். வெறும் பேச்சும், வீண் சோம்பலும் நீங்கி நல்ல நெறியாக இருக்கும் நல்ல வாழ்வே நாட்டின் செல்வம் என்பதை எல்லோருக்கும் சொல்லி முடிக்கும் போது சர்வாதிகாரி தற்கொலை செய்து கொள்ளுகிறான். தீமை அழிகிறது. புதிய புகழ் துவங்கு கிறது. உண்மைகள் வாழ்கின்றன. நியாயங்கள் தலையெடுக்கின்றன: தருமம் மறுபடியும் ஒரு முறை பெருமூச்சு விடுகிறது இரண்டு திருமணங்கள் நடைபெறுகின்றன. மணிவண்ணன் - கனிமொழி: சுகதேவன் - சாந்தி வழக்கம் போல் நல்லது வெல்லாவிட்டால் உலகம் வாழ்வதுதான் எப்படி ஐயா? கதையைப் படித்தோம். இனி நாடகத்தைக் காண்போம். -