பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம் : பயங்கரச் சிறை - காலம் : பகல் (பாதாளக் காவல் காவலர் நடமாட்டம். பின்னணி ஒலிகள். சில கைதிகள் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டிருக்கின்றனர். சிலரது கை கால்கள் சங்கிலியால் பிணிக்கப் பட்டிருக்கின்றன. பலர் பரிதாபப் பார்வையோடு விடுதலை வருமா என்று ஏங்கிய வண்ணம் நடமாடுகின்றனர். துயரத்திற்கும் துன்பத்திற்கும் மனிதக் கொடுமைக்கும் உறைவிடமான அந்தப் பூலோக நரகத்தில், புழுதியும் புழுக்கமும், இருளும் ஈரமும் நிறைந்த ஒரு பகுதியிலே, நாற்புறமும் வெளிச்சம் புகாத கற்சுவர்கள் காவல் செய்ய, ஒரு கிழக்கைதி முடிவற்ற துன்பத்துடன் எதையோ முணகிய வண்ணம் உட்கார்ந்திருக்கிறார். அவர் கழுத்தில் தாங்க முடியாத ஒரு சங்கிலி! காலுக்கும் கைக்குமாக இரும்புச் சங்கிலிகள் அணி செய்கின்றன. அடிக்கடியும் அக்கைதியின் வாயிலிருந்து வரும், சாந்தி. சாந்தி. வாணி! வாணி' என்ற கூக்குரலைக் கேட்டவுடனே மற்றக் கைதிகள் கண்ணிர் விடுகிறார்கள். அவரது பரட்டைத் தலையும் கிழிந்த உடையும் அழுக்குப் படர்ந்த மேனியும் அவரை முழுமையான ஒரு பைத்தியக்காரன் என்பதைப் பறை சாற்றுகின்றன: திடீரென்று கைதிகள் அனைவரும் சோகத்தின் ஆழத்திலிருந்து, அச்சத்தின் அடிவயிற்றிலிருந்து, முடிவின் மூலாதாரத்திலிருந்து, கடைசி மூச்சின் கலவரமான அவலத்திலிருந்து, கருகிய கருத்து உருகிடும் இசையிலே கலந்து பாடுகிறார்கள்) - கூட்டப் பாட்டு கைதிகள்: சோதரா. சோதனை நரகமே தீருமோ வேதனை. மாறுமோ (சோதரா) மகான் நம் கவியோர் மாசறியாரே பாழும் துன்பம் ஏகுமோ - நெஞ்சம் வேகுமோ? (என்று புலம்பித் துடிக்கின்றனர்)