பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கவியின் கனவு வீரன்2 : சுகதே சர்வா சுகதே சர்வா சர்வா யாரோ ஒரு பைத்தியக்காரன். அவன் ஒரு ஆயுட்கைதி அவன் ஒரு கவிஞனாம். என்ன கவியா? கைதியாயிருக்கிறாரா? பைத்திய மாகவா? அடே அவனை இன்னுமா உயிருடன் வைத்தி ருக்கிறீர்கள்? கொண்டு வாருங்கள், சிறை மந்திரியார் பார்க்கட்டும். (வீரர்கள் செல்ல, சகதேவி சர்வாதிகாரியை வெறுப்புடன் பார்த்து ஐயா தாங்கள் தங்கள் பரம்பொருள், சொர்க்க நரகங்களைப் பற்றிய அராய்ச்சிகளை விட்டு, இந்நேரத்தில், வர வேண்டாத, பயங்கரச் சிறை யாகிய இங்கு வந்தது எதற்காக? தங்களைப் போன்ற இளம் வாலிபர்களை நிர்வாகப் பொறுப்புக்கு ஏற்றவர்களாகச் செய்யும் கடமையை, நான் வேண்டாம், வேண்டாம்’ எனப் பலமுறை மறுத்தும், அரசர் வீரசிம்மர் விடாப்பிடியாக என்னிடமே ஒப்படைத்து விட்டார். என்ன செய்வது? நாம் பாசத்தை விட்டாலும் அது நம்மை விடுகிறதா இலேசில்! ஒய்விலாப் பெரும்பணி மகா காளி. மகா காளி. சச்சிதானந்தம்! (மீண்டும் அதே சோகப் பாட்டின் அவை ஒவி உள்ளிருந்து கேட்கிறது) "சோதரா சோதனை நரகமே தீருமோ - வேதனை...." (வெகுண்டு ஆகா, என் கையிலிருப்பது வாளா யிருந்தால் இந்தப் பாவஜென்மங்களுக்கு, சிறை மந்திரியார் முன்னிலையிலேயே நல்ல பாடங் கற்பிப்பேன். எங்கே, தங்கள் வாளையாவது கொடுங்கள்.