பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(சர்வாதிகாரியின் ஆடம்பர மாளிகை) (மனிதச் சிற்றின்பங்கள் யாவும், மண்டிக் கிடக்கும் அரண்மனை, தளிர்க்கரங்களில் தங்க மதுக் கோப்பைகள் ஏந்திய மங்கையர் கூட்டம். ஏவியதும் தாவி வந்து கால் பிடிக்கும் காவலரின் காக்கைக் கும்பல்) காவலர் குரல்கள் : இராசாதி இராச இராச மார்த் சர்வாதி: தாண்ட இராச கம்பீர, இராச கோலாகல மகர குண்டல - மகா மண்டலாதிபதி சர்வ அதிகார இராச குருதேவர் வருகிறார். வருகிறார். (உள்ளே இரண்டு கிங்கங்கள் கத்துகின்றன - சர்வாதிகாரி அன்புடன் வளர்க்கும் காட்டுச் கிங்கங்கள்/ கண்டாகர்னா! நமது காவற் சிங்கங்கள் ஏன் இப்படிக் கத்துகின்றன? இரை போடவில்லையா? அல்லது போட்ட இரை போதவில்லையா? (மீண்டும் சிங்கத்தின் குரல்கள்) கண்டாகர்ணா : போடேனுங்க, சாமி! ஆனால் இது மனித சர்வா கண்டா : ரத்தம் வேணும்னு ஆசைப்படுது. நர மாமிசத்தை எண்ணி நாக்கைத் தீட்டுதுங்க சாமி. ஏன்? நம் பாதாளச் சிறையில் இருக்கும் கைதிகளைத் தினம் ஒருவராக இதற்கு இரை யாக்கலாமே? - பயனில்லிங்க, சாமி, பாதாளச் சிறைக் கைதி களை இந்தச் சிங்கங்கள் முகர்ந்துகூடப் பார்க்க மாட்டேங்கிறதே!