பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கவியின் கனவு ஒருநாள் ஆனந்தன், ஆறு வயது அருமைப்பெண் குழந்தை சாந்தி. ஏழு வயது இளம்பாலகனான தன் வளர்ப்பு மகன் மணிவண்ணன் - இவர்களுடன் விளையாடுகிறான். குழந்தைகளும் ஏதேதோ விளையாட்டுகளைச் சொல்லி, தங்கள் மழலையின்பத்தை அள்ளி வீசுகின்றன. மக்களின் ഥഴഞ്ഞു. தேனையுண்டு தன்னை மறந்த பரவச நிலையில் இருக்கிறான், கவிஞன். சர்வாதிகாரியின் புயற்படையினர் வந்து, ஆனந்தனை நாட்டின் விரோதி - ராஜத்துரோகி என்று காரணம் காட்டி, கைது செய்து கொண்டு போகிறார்கள். தந்தையிடம் பாசத்துடன் ஓடிவந்த அன்புக் குழந்தைகளை அடித்துத் துரத்தி ஆசிரமத்திற்குத் தீ வைக்கின்றனர். கவிஞனது கனவுக் கோயில் ஆயிரம் தூளாகத் தகர்க்கப்படுகிறது தலையில் பலமாக அடிபட்டதாலும், குழந்தை களைப் பிரிந்த அதிர்ச்சியாலும், நிலைகுலைந்த கலையுள்ளம் அலைபட்ட துரும்பாகிறது. கவிஞன் அறிவு சிந்திக்கும் திறனை இழந்து விடுகிறது. காலஞ்சென்ற மன்னர் ஆத்மநாதர் ஏதோ ஒரு அரிய செல்வத்தை ஆனந்தனிடம் ஒப்படைத்துப் போனதாயும் அந்தச் செல்வம் எங்கே இருக்கிறது என்பதைத் தன்னிடம் நாளது வரை சொல்லாமல் மறைத்து வைத்திருந்தான் என்றும், இந்த இரகசியம் கவிஞன் ஒருவனுக்குத் தான் தெரியும். ஆதலால், அவனை உயிரோடு வைத்துப் பித்தந் தெளிவித்து விசாரிக்க வேண்டும் என்றும் ஒரு ஆதாரமில்லாத குற்றத்தைச் சாட்டுகிறான் சர்வாதிகாரி. இதைக் கேள்வியுற்ற ராணி ஊர்வசி தேவி, ஆனந்தனிட மிருந்து உண்மையை அறியும் சக்தி தனக்கிருக்கிறதென்று கூறி, கைதி ஆனந்தனைச் சிறையில் தனிப்பட்ட முறையில் பல தடவை சந்திக்கிறாள். பாவம் அந்தக் கவிதைப் பைத்தியத்திடம் பழைய காதல் பைத்தியம் தன் கனவைச் சொல்லுகிறது. பாவம் பருவம் கடந்தபோதிலும் அதன் பச்சை நினைவுகள் மறையாமல் அவ்வப்போது படமாடுகின்றன. o ஏற்கெனவே தான் கொண்ட காதல் நினைவுகளை ஞாபக மூட்டுகிறாள். தனக்கு இசைந்தால், சகல சுகபோகங்களோடும்