பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கவியின் கனவு கிழவர் : ஆமாம் அப்போ ஏதோ வெறுப்பிலே சொன்னேன். பணமில்லாமே நீயும் நானும் நாடகம் ஆடினா அது தெருக்கூத்து. தவறு கேவலம். ஆனா, பெரியவங்க ஆடினா, அது கலை. அதெல்லாம் அந்தக் காலம். இப்போ காலம் மாறிப்போச்சு. எவ்வளவு பெரிய ஆளுங்கல்லாம் நாடகம் ஆடி நாட்டை ஆட்டிப் படைக்கிறாங்க, அனாதையா கிடந்த நாடகம், அரங்கத்துலே ஏறிடிச்சு. குறைச்சலா பேசப்பட்ட நாடகம், கோட்டை வரைக்கும் போயிட்டுதே. வாங்க, வாங்க. (காசி 5 முடிவு)