பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கவியின் கனவு வீரசி சர்வா செழித்து விளங்குகிறது. அந்த அரிய கலையைக் கண்டு மகிழ்ந்த பின்னர் இந்த அரண்மனை நாட்டியத்தை எல்லாம் ஒரு பெரிய சாதனையாக எண்ணி நாம் இறுமாந்துவிட முடியாது. கலையை வளர்ப்பவர்கள் முதலில் அடக்கமும் நன்னடத் தையும் உள்ளவர்களா யிருத்தல் வேண்டும். ஒழுக்கமும் விழுப்பமும் கலைஞர்களின் உயிர் நாடிகள். ஆதலின், இக்கலை விழாவின் பயனாக நாம் அதை அகண்ட செல்வமாக்க முயல் வோமாக, உண்மைக்கு உழைக்கும் நல்லோர்கள் வாழ்வார்களாக வணக்கம். (ஊர்வசியின் சீற்றம். ராஜகுருவின் தடுமாற்றம்! அவை, பாராட்டிக் கை தட்டுகிறது. அரசன் வீரசிம்மன் சமாளித்து எழுந்து சபையோர்களே! இந்நாள், வாழ்வில் ஒரு புனித நாளாகும். எனதழைப்புக்கிணங்கி வந்து சிறப்பித்த உங்களுக்கு வணக்கம், சென்று வரலாம். - (அனைவரும் வணங்கி மெதுவாக வெளியேறல்/ வீரசிம்மா! சற்று என்னுடன் வா! (சர்வாதிகாரிவின் பின் வீரசிம்மன் வெளியேறன். சகதேவனும் மெதுவாக வெளியேறல் அவனைப் பின்பற்றி செல்ல எழுத்த கனிமொழியை இளவரசி மேனகா தடுத்து மேனகை :கனிமொழி, பொறு. போகலாம். கனிமொழி : மேனகை, நான் போகவேண்டும். அதோ, என் மேன. 品 அண்ணாகூடப் போய்விட்டார். பரவாயில்லை, இரு. நான் கொண்டுபோய் விடுகிறேன். என்றைக்கோ ஒருநாள் மின்னலைப் போல் வந்தவுடனே போய் விடுகிறாய், வா, என் அறைக்குப் போய், சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்போம்.