பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் -- --- - - - - --- 79 வீரசி : ஊர்வ : வீரசி ஊர்வ அதற்கு வழி இதுவல்ல, கண்ணே என் இனிய ஊர்வசி வீணாகச் சுகதேவைப் பகைத்துக் கொள்வதால் பயனில்லை. அவனிடம் மக்கள் எவ்வளவு மதிப்பும் உள்ளன்பும் வைத்திருக்கி றார்கள் தெரியுமா? பெருங்குடி வணிகரிடம் அவனுக்கு அளவற்ற செல்வாக்கு இருக்கிறது! அதனால்தான் அவன் இன்று சிறை மந்திரி யாகவும், சேனாதிபதியாகவும் இருப்பது. மூடுங்கள் வாயை. என் ஒளி வீசும் பாதங்களிலே ஒட்டிய தூசு பெறாத சிறுவனைப் பற்றிப் புகழுரை படிக்க ஆரம்பித்து விட்டீர்கள். அவன் என்னைக் குறித்துக் குறை கூறிக் கொட்டின வரை மொழிக்குப் பரிகாரம், அவனது உயிர்தான். உன்னைப் பற்றி யார் எப்படிக் கூறினால் தானென்ன? காலத்தை வென்று நிற்கும் உனது ஈடு இணையில்லாத இனிமை. இளமையின் மென்மை, கலையின் திறமை. காலப்பெருமை யால் குறைந்து விடப் போகிறதா? அகிலமறிந்த அழகரசி நீ! அனுபவமற்ற சிறுவன் அவன்! அதற்காக நீ இப்படி வருந்தலாமா? ஊர்வசி, திராட்சை ரசத்தைப் பருகினால்தான் மயக்கம். உன்னைப் பார்த்தாலே மயக்கம்! உன் கலை யழகை ரசிக்கும் முறையறியாமல் அம்முரடன் குறை கூறிவிட்டதை மன்னித்து விடு. கத்தி யெடுக்கும் போர்வீரன்தானே அவன்? மேலும், கலியாணமாகாத இளங்காளை, பெண்களின் பெருமையை அவன் என்ன கண்டான்? உம். வேந்தே! இந்தத் தெய்வத்தின் வனப்பிலே, அழகின் இனிப்பிலே, ஆசையின் களிப்பிலே, இளமையின் நெருப்பிலே வேட்கை கொண்டு, ஈடுபட்டுப் பிச்சைக்காரர்களான பேரரசர்கள் எத்தனை பேர்? இந்த மன்மத மாளிகையின் கனவிலே கலங்கிச் சிதறுண்ட சாம்ராஜ்யங்க