பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நாரா. நாச்சியப்பன் 69

அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். உள்ள பொருளை எடுத்துச் சொல்ல வேண்டியதுதானே ?” என்று ஒரு நண்பன் ஊக்கமூட்டினான்.

முடிவில் முத்து வடுகநாதன் எழுதிய ஆயிரங்கவிதைகளில் நல்ல கவிதைகளாக நூறு கவிதைகள் தேர்ந்தெடுத்து மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்கு அனுப்பி வைப்பதென்று முடிவாயிற்று. கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும் வேலைகளை நண்பர்கள் மேற்கொண்டார்கள். அவர்கள் தத்தம் மனதுக்கு அழகாகவும் சிறப்பாகவும் தோன்றிய கவிதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒலைகளின் மேல், ‘வேலம்பட்டிக் கவிஞர் முத்து வடுகநாதர் இயற்றியருளிய கவிதைத் திரட்டு’ என்று ஒரு வாசகத்தை ஓர் ஒலையில் எழுதி வைத்துக் கட்டி, ஒர் ஆள் மூலம் மதுரைக்கு அனுப்பினார்கள்.

மதுரைக்கு ஒலைக்கட்டு எடுத்துச் சென்ற ஆள் ஐந்தாறு நாட்களில் திரும்பி வந்தான். அவன் கையில் கொடுத்து விட்ட ஒலைக்கட்டு அப்படியே இருந்தது.

“ஏன், சங்கத்தில் கொடுக்கவில்லையா ?” என்று பரப்பரப்போடு கேட்டான் முத்து வடுகநாதன்.

“கொடுத்தேன். அங்கேயிருந்த ஒரு புலவர் ஒலைக் கட்டைப் பிரித்துப் பார்த்தார். ஐந்தாறு

ந.சி II-5