பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 159 இடம் : சிறைச்சாலை - பாதளக்காவல். காலம் : மாலை (பின்னணி - கைதிகள் சோகக் கீதத்தை ஒலிபரப்பியபடியே பாடுகிறார்கள். ஒரு பகுதியில், மணிவண்ணனும் கனிமொழியும் அமர்ந்திருக்கிறார்கள். மணிவண்ணனது காயங்களுக்குக் கனிமொழி சிகிச்சை செய்து கொண்டிருக்கிறாள். ஏற்கெனவே சிறை நிர்வாகம், சுகதேவன் பிரதிநிதி கருணாலயன் வசமிருந்த தால், அங்கு கனிமொழிக்குச் சகல உரிமைகளோடு கைதிகளை நிர்வகிக்கும் பொறுப்பும் கிடைத்திருக்கிறது. கனிமொழியும் மணிவண்ணனும் கைதிகளை மகிழ்வூட்டப் பாடுகிறார்கள்) (விருத்தம்) ԱՕsof : மனமே உன்வாழ்வே இனிதாக வேண்டும் மதியால் விதியை வெல்வோம் நீ வாராய் வீண்துயர் வேண்டாம். பாடல் கனி : இன்பம் எங்கே இன்பம் எங்கே மணி : என ஏங்காதே துன்பத்திலே கனி : அன்பில் இன்பம் உயர்பண்பில் இன்பம் - ஆசை தியாகத்திலேதான் அழியாத இன்பம் காண்பாய் (இன்பம்) கருணா : (வந்து அம்மா! உணவு முடிந்ததா...? மணி வண்ணருக்கு உடம்பு எப்படியிருக்கிறது? கனி ; அவருக்கு வேறொன்றும் குறைவில்லை. தங்கை சாந்தியைக் காணவேண்டுமென்ற ஏக்கந்தான் பெரிதாயிருக்கிறது!