பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 வீரசி கவி வீரசி ஊர்வ கவி கவியின் கனவு குழந்தையாக என்னிடம் ஒப்படைத்து இறந்து போனான். அவன் நினைவாகவே இவருக்கும் அப்பெயர் வைத்தேன் வேந்தே இவர்தான் உமது அண்ணன் மகன். - - ஆ மைந்தா! உன் தந்தையைக் கொன்ற பாதகன் நான் - மன்னித்துவிடு - சுகதேவ் மகுடத்தை எடுத்து வா (சகதேவன் எடுத்து வர மைந்தா அமரநாதா இதைப் பெற்றுக்கொள்! எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். செய்த குற்றத்தை உணர்ந்து வருந்தும் உங்களை ஆண்டவன் மன்னிப்பாராக. மனிதன் செய்யும் மாபாவங்களையெல்லாம் கழுவிப் புது மலர்ச்சி தரும் ஞான கங்கை கண்ணிர்! ஆண்டவா! என்னே உன் கருணை! மனிதன் கண்ணிரில் பாவங்கள் கரையட்டும். வணக்கம்! கவியரசே சுகதேவி! கவியரசே கடைசியாக என் முகத்தை ஒருமுறை கனிவுடன் பாருங்கள்! அடுத்த பிறவி ஒன்றிருந் தால் அவசியம் உங்களையே என் உயிராகக் கொள்வேன்! இளமையின் வைராக்கியம்? இறப்பிலே அமைதி யடையட்டும்; ஆண்டவா! (ஊர்வசியும் வீரசிம்மனும் இறந்து விடுகின்றனர்) (காசி 24 முடிவு)