பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 கவியின் கனவு இடம் : சோலை குளக்கரை காலம் : பின்னிரவு (சர்வாதிகாரி சாந்தியைக் குளத்திலே போடுகிறான். ஒடிவந்த சுகதேவன் துரத்திலிருந்து இக்காட்சியைப் பார்த்து வந்து, குளத்திற்குள் குதித்து விடுகிறான். அதுதான் சமயமென்று சர்வாதிகாரி ஒரு பெரிய கல்லைத் துரக்கி அவன் தலையில் போடப்போகும் தருணத்தில், கார் மேகன் பின்புறமாக ஓடிவந்து கல்ல, :ப பிடுங்கி எறிகிறான். கண்டாகர்ணனும் சர்வாதிகாரியும் கார்மேகத்துடன் சண்டைப் போட்டுக் கொண்டு இருக்கையில் குளத்திலிருந்து சாந்தியை மீட்டுக் கொண்டு. சுகதேவன் கரையேறி, இருவரையும் வாளெடுத்துத் துரத்திவிட்டுச் சாந்தியைக் கவனிக்கிறான்) சிர்கதே ஆ! கார்மேகம்! இப்பெண் மணிவண்ணனின் தங்கை சாந்தியல்லவா! கார் : ஆமா, எசமான்! மயக்கம் கொடுத்திருக்காங்க. இதோ மூலிகை கொண்டு வர்ரேனுங்க! பயப் படாதீங்க! எப்படியும் பிழைக்க வச்சுடலாம். சுகதே : சீக்கிரம் மாளிகைக்குப் போய், சிகிச்சை செய்தபின், விரைவில் சிறைக்குப் போய்த் தங்கை கனிமொழியைக் காண வேண்டும். கார் : பயப்படாதீங்க, எசமான்! (காசி 21 முடிவு)