பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 சர்வா கவியின் கனவு சீ. வேதாந்தப் பித்தர்களே! யார் செய்தது குற்றம்? என்ன பிதற்றுகிறீர்கள்? எது தர்மம்? எது குற்றம்? பிறந்த நாட்டின் மீது பற்றின்றி, மத வெறி பிடித்து, எண்ணற்ற ஜாதிகளாய், கணக்கற்ற பிரிவுகளாய்ப் பேதம் பேசி, உலகத்தோடு ஒட்டி வாழத் தெரியாத வெட்டிகளாக வளர்ந்து, வீண் வம்பைப் பேசி, சொந்தச் சகோதரர்களையே நிந்தித்து அழிந்து போய்க்கொண்டிருந்த உங்களைச் சேர்க்கவே நாங்கள் இந் நாட்டைப் பிடித்தாள முயன்றோம். அது குற்றமா? வாழத் தெரியாத வீணர்கள் நீங்கள், நாங்களோ சிங்கம் போன்ற சூரர்கள். பொன் விளையும் இப் பூமியைத் தாய்நாடாகக் கொண்டும், தொழில் வளமற்ற தொழும்பர்களாய்த் தின்று கொழுத்துத் தூங்கும் திண்ணைச் சோம்பேறிகளாய், வந்தவர் போனவர்கட்கெல்லாம் உங்கள் வளநாட்டில் இடங்கொடுத்து, காலத்தைக் கொன்று, கள்ளுண்டு மயங்கிக் கிடந்த உங்களை நல்வழிப் படுத்தி நாகரிகத்தைப் புகட்டவே இந்நாட்டைப் பிடித்து ஆளத் திட்டம் போட்டோம். அது குற்றமா? அரசியல் வெற்றி பெற அயல்நாட்டு உதவியைத் தேடினோம். அது குற்றமா? பிற நாடுகள் விஞ்ஞானத்தில் நகரின்றி விளங்கு கின்றன. அதைப் போலவே இந்நாட்டையும் முன்னேற்ற உணர்ச்சியில் புதுப்பிக்க எண்ணியே என் வழியில் மாற்ற முயன்றேன். அது குற்றமா? எதுவும் குற்றமில்லை, அறிவற்றவனை ஆற்ற லுள்ளவன் அடிமை கொண்டு ஆள்வதே தர்மம். கோழைகளை வீரர்கள் கட்டியாள்வதே அரசியல் நியதி கட்டுப்பாடற்ற உங்களை ஒன்றுபட்ட நாங்கள் ஒடுக்கி ஆள்வதே ஆட்சிமுறை. இதை அநீதியென்றோ குற்றமென்றோ எவரும் கூற முடியாது. பெற்ற தாய் நாட்டையே பிறர்க்கு விற்கும் பேடியர்கள் நீங்கள்! தன்னல மந்தைகள்.