பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 கார் d#SITf]r சாந்தி கவியின் கனவு என்ன எசமான், பெரிய தொல்லை, எளவா இருக்குது! மகராசா இவ்வளவு நல்லா, அரண் மனை கோட்டை கோபுரமெல்லாம் கட்டிக் கொடுத்திருந்தும் இந்த இளவரசியம்மா, எப்போ பார்த்தாலும், குளம், குட்டை, புதர், பூச்செடி இதுகளிலேயே ஒளிஞ்சி விளையாடி எனக்குப் பெரிய தொல்லை தர்றாங்க, காலையிலே எழுந்திருச்சா - எங்கே இளவரசி மாலையிலே என்னாடான்னா - எங்கே இளவரசி சாமியாரு என்னாடான்னா பாடம் படிக்கணும்னு தேடறாரு - மகாராணி அலங்காரம் செய்யத் தேடறாங்க. தேடித் தேடி என் காலும் ஒஞ்சி போச்சு, போங்க எசமான். எப்போ பார்த்தாலும் ஒரு ஆம்பிள்ளைக்கு ஒரு பொம்பளையைத் தேடித் திரியறது தானா வேலை? வெளியே சொல்லவே வெக்கமாயிருக்குது. சொல்லாம யிருக்கவு முடியல்லே - இந்த வேலைக்குத்தான் அரண் மனையிலே சம்பளந் தர்ராங்க. போங்க எசமான் - ரசமில்லாத வேலை. அப்பா, நீ தயவு செய்து போ. எசமான்! நீங்க எதுக்காகங்க வருத்தப்படlங்க? பொறுத்தது பொறுத்தீங்க. இன்னும் பத்து நாள் பொழுது பொறுத்துக்கோங்க. அப்புறம் உங்களுக்கும் எளவரசிக்கும் கலியாணமாயிடும். எனக்கும் தேட்ற உத்யோகமும் நின்னுடும் - சரிங்க, இதோ இப்படிப் போயிட்டு வர்ரேன். (போகிறான்) (மாளிகைச் சிறை வாசத்தாலும், கனிமொழியின் பிரிவாலும், கலைவாழ்வின் சீர்குலைவாலும் பெரிதும் பிடிக்கப்பட்ட சாந்தி நவிந்த உடல் நிலையுடன் வந்து அண்ணா! நாள் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதானா?