பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம் : திருமண மண்டபம் காலம் : காலை நிகழ்ச்சி : அவசரத் திருமணம் - எதிர்பாராத புரட்சி வீரசிம்மன் : நம் குருதேவரே விவாகத்தைத் தமது திருக் கரங்களால் நடத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். (மாவையை எடுத்து மணிவண்ணனிடம் தர) பெருங்குடி : அரசே! சற்றுப் பொறுக்க வேண்டும். சேனாதி சர்வா பதி சுகதேவர் வர இயலாததால், அவரது தங்கை கனிமொழிதேவியை அனுப்பியுள்ளார்கள்! அவர் கள் வந்ததும் விழாவை ஆரம்பிக்கலாம். கண்டவர்களுக்காகக் காலம் காத்திருக்குமா? (சர்வாதிகாரி தந்த மாலை மணிவண்ணனின் கையிலிருந்து கீழே விழுகிறது. இச்சமயத்தில் ம7ங்கல்பத்தையும் தருகிறான். மணிவண்ணனும் சாந்தியும் கண்கலங்கி நிற்கும் போது, கனிமொழி கையில் மாலைகளுடனும் வாழ்த்திதழுடனும் வருகிறாள். எதிர்பாராத இச்சம்பவத்தைக் கண்ட மணிவண்ணன் ம7ங்கல்யத்தையும் கீழே விட்டு விடுகிறான். சபைபோரின் பார்வை, கனிமொழி பின் மீது திரும்பிய தருணத்தில் சர்வாதிகாரி ம7ங்கல்பத்தை இளவரசியின் கையில் போட்டு விட்டு அவரச அவரசமாக)