பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 185 கவி மணி கவி பேசிக்கொண்டே இருக்கும் ஒரு பொதுக் கூட்டம் உங்களை ஆட்டிப் படைக்கவே எங்கள் அறிவுப் படை உங்களை அடிமைப்படுத்தியது. எளியாரை வலியார் ஆள்வதே உலக சரித்திரத்தின் ஆரம்பப் பாடம்! மனித உருக்கொண்ட பேய் நீ! சர்வாதிகார விஷம் உனக்குச் சரியாய் ஏறிவிட்டது. மண் வெறி பிடித்த உன்மண்டை மிகவும் பெருத்து விட்டது. அடே! நீதிமான் போல் பேசுகிறாயே. ஏதோ கால வித்தியாசத்தால் ஒரு நாடு வீழ்ச்சியுற்றால், அதை மேலும் சுரண்டி நசுக்கிப் பிழிவதுதான் நாகரிகத்தின் அழகா? உண்ட வீட்டிற்கு இரண்டகம் எண்ணிய துரோகி நீ. இதுதான் அரசியல் நாகரிகத்தை நிலைநாட்டுவோர்க்கு அழகா? கேவலம், நீ பதவி பெறுவதற்காக நாட்டையே அயலாருக்கு அடகு வைக்கத் துணிந்த துரோகி நீ உன் கனவில் நீ கட்டிய கோட்டை தகர்ந்துவிட்டது. போரில் உன் சூழ்ச்சிப் படைகள் சிதறடிக்கப்பட்டன. முடிவில் வெற்றி எனதரும் நாட்டின் தேசபக்திப் படைக்குத் தான். நீதியும் நேர்மையும் எமக்கு உதவுகின்றன. அநீதியும் அக்கிரமமும் உங்களை அழிக்கின்றன. அயலான் அடிவருடும். நீ அறிவைப் பற்றிப் பேசுகிறாய்! கோட்டான் குயிலுக்கு இசை கற்றுக் கொடுப்பது இயற்கைக்கு மாறுபட்டது, உண்மைக்கே விரோதமானது. உலகம் பொறுக் காது அப்பனே! அப்பா! இக்கயவனுக்கு என்ன தண்டனை விதிக்கலாம்? மக்களின் மனத்தில் என்னென்ன உதிக்கிறதோ, அவர்கள் ஆறுதலுக்கே இவன் தண்டிக்கப் படட்டும் இவன் மனத்தை மாற்றிக்கொண்டால்