பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கனி சுகதே சுகதே மணி சுகதே மணி சுகதே கவியின் கனவு போங்கள் அண்ணா, எனக்கென்ன சமைக்கத் தெரியாதா? அடாடா இதற்குள் கோபித்துக் கொண்டாயே! சரி. அழைத்துவரச் சொல்லியிருக்கிறேன். விரை வில் வந்துவிடுவார்கள். எங்கே மலர்கள்? தந்தையாருக்குச் சூட்டுவோம். (தட்டிலிருந்த மலர் மாலையைத் தன் தாப் தந்தையர் படத்துக்கும், காலஞ்சென்ற சக்கர வர்த்தியார் படத்திற்கும் போட்டு வணங்குதல், அச்சமயம் மணிவண்ணனும் சாந்தியும் வந்துவிடு கிறார்கள் வந்த வீரர்கள் வெளியேறுகிறார்கள்/ வருக கலைமணியே! வணக்கம். வணக்கம். தங்களது வரவேற்பு எங்களைத் தலை குனியச் செய்கிறது. இப்பெருஞ் சிறப்புக்கு எவ் வகையில் உகந்தவர்கள் என்று என் மனம் திகைக்கிறது. தாங்களோ நாட்டின் வீரதிலகம்! தாங்கள் நாட்டின் கலைஞர் திலகம், அமருங்கள். அன்பின் பீடத்திலே வேற்றுமையில்லை. தங்களது கலைஞானம் இந்நாட்டின் புதிய செல்வம். அதைப் பெருமைப்படுத்துவது எமது கடமை. இப்படி அமருங்கள்! இத்திருவுருவம் யாருடையது? இதுதான் எனதருமைத் தந்தையின் உருவம். நாட்டின் மாசற்ற சேனாதிபதி. சத்யதேவர் என்பது இவர் பெயர். இருபத்தைந்து ஆண்டுகட்கு முன்னர் எதிரி நாட்டுப் படைகளின் வஞ்சகத்தால் உயிர் துறந்தார். தாயும் அவரைப் பின்பற்றினார். நாங்கள் இருவரும் எஞ்சிப் பிழைத்தது ஒரு துறவியினால், இதோ இப்படம், காலஞ்சென்ற ஆத்மநாத மன்னருடையது. அவரும் அப்படித் தான் அகால மரணத்தால் ஆவி துறந்தார்.