பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 161 ஓடிவிடலாமென்ற எண்ணத்துடன் வருகிறான். வீரர்கள் அவனைத் தடுத்து நிறுத்துகிறார்கள்) சர்வா : வீரர்களே! நான் உள்ளே போக வேண்டும். நரசி : முடியாது. வீரன் ஆறுமுகம் : குற்றவாளிகளை மாத்திரந்தான் உள்ளே அனுமதிக்கும்படி உதவிச் சிறையதிகாரி கருணாலயப் பிரபு உத்தரவிட்டிருக்கிறார். சர்வா : அடே! நான் உங்களைப் சபிப்பேன். வீரன் ஆறுமுகம் : செய்யுங்க. சாமி. உங்க சாபத்துக்கு வாலிபம் குறைஞ்சு போச்சு. சர்வா : (விழித்து அடே! இதோ அரசரின் முத்திரை மோதிரம். எனக்குச் சகல அதிகாரத்தையும் அரசர் கொடுத்திருக்கிறார். வீரன் நர : அடேடே! மகாராசாவின் மோதிரத்தை நீங்க - ஏன் எடுத்து வந்தீங்க..? (இதற்குள் மற்ற இரு வீரருடன் கார்மேகம் பிரவேசித்து கார் : எசமானனே, வணக்கம், என்னா உங்க முகத்திலே சோக ரசம், வீர ரசம் - எல்லா ரசமும் சேர்ந்து வீசுதே! என்ன சங்கதி? உங்களை ரொம்ப சீக்கிரமா, அவசரமா, விரைவா, ஒட்டமா அரசர் அழைச்சுகிட்டு வரச்சொன்னார். சீக்கிரம் கிளம்புங்க. சர்வா : அடே, வேலைக்கார நாயே! கார் : அடேடே பயலே, பார்த்தியா. அடே பிச்சைக் காரப் பரதேசிப்பயலே! அவ்வளவு திமிரா? போடா வெளியே! மரியாதை தெரியாத மரநாயே. சர்வா : அவமானம். (கட்ட7ரியை எடுக்கிறான்)