பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 171 சுகதே : கவி சுகதே கவி சுகதே மணி கவி ஆம். பயப்படாமல் தெரிவியுங்கள். இங்கு. பகைவன் ஆட்கள் யாருமில்லையே? சந்தேகமே வேண்டாம். நாங்கள் காலஞ் சென்ற இந்நாட்டின் சேனாதிபதி சத்யதேவரின் குழந்தைகள். சத்யதேவர். (மிகவும் சிரமப்பட்டுச் சிந்தித்து அவர் என் அரிய நண்பர். அப்படியானால் உம் பெயர்.? என் பெயர் சுகதேவன். இவள் என் தங்கை கனிமொழி. தயவு செய்து தங்கள் மனத்தில் உள்ளதைச் சொல்லுங்கள். ஆம், அப்பா. சொல்லுங்கள். (நினைவுபடுத்தி, உம். சுமார் பல பல ஆண்டு களிருக்கும்; அழகு வெறி பிடித்த ஊர்வசியின் சதியால் எனது உயிர்க்குயிரான வாணி கொல்லப் பட்டாள் - தெய்வமாகி விட்டாள். அந்தத் தெய்வம் உடலால் மறைந்தாலும் என் உயிரின் உயிராக இருக்கிறாள். என் குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டாள். என் வாணி பிரிந்தபின் குழந்தைகளையும், குருகுலத்தையும் அதன் வாயிலாக நாட்டுப்பணியையும் பாட்டுப் பணி யையும் செய்து வந்தேன். ஒருநாள் குரு குலத்திற்கு வந்து சர்வாதிகாரி என்னைக் கைது செய்தான். அதற்கு அரண்மனை வேலைக்கார னாகிய மணிவண்ணன் என்பவன், தன் குழந்தை யைப் பலியிட்டு ஆத்மநாத சக்கரவர்த்தியின் குழந்தை அமரநாதராகிய இவரை என்னிடம் ஒப்புவித்து மாண்டு போனான். அவன் ஞாபக மாகவே இவருக்கு மணிவண்ணன் என்று பெயர் வைத்தேன். என் குழந்தை சாந்தி யோடு சொந்த மகனாகக் கருதி வளர்த்து வந்தேன். நான் கைதி யானதும் இவர்கள் அனாதைகள் ஆனார்கள்.