பக்கம்:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தை பெரியார்


படுத்துவார். கணவன் சொல்லை மீற முடியாமல் சமைத்துச் சாப்பாடு போடுவார். அதன்பின் குளித்து விட்டு மற்றவர்களுக்குச் சமைப்பார். அவர் சமைத்து வைத்த சோற்றுப் பானைக்குள் எலும்புத் துண்டை புதைத்து விட்டு நழுவி விடுவார் இராமசாமி. நாகம்மையார் சாப்பிடும் போது எலும்பு வெளியே வரும். நோன்பு கெட்டுவிடும். அடிக்க்டி இந்த மாதிரி நடக்கவே மாமியார் மருமகளை அழைத்து "இனிமேல் நீ விரதம் இருக்க வேண்டாம்" என்று சொல்லிவிட்டார்.

குறும்புத்தனமாகப் பல செயல்கள் செய்து நாகம் மையாரைப் படிப்படியாக மாற்றிக் கொண்டு வந்தார். முதலில் விரதம் நின்றது. அடுத்தபடி கோயிலுக்குப் போவது நின்றது. கடைசியாகத் தாலியையும் கழற்றிவிட்டார்.

ஒரு நாள் இரவு தாலியைக் கழற்றும் படி

16