பக்கம்:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தை பெரியார்

அய்யர்களுக்கு மட்டும் தான் சோறு கிடைத்தது. மற்ற சாதியாரை உள்ளேயே விடுவதில்லை.

இந்த உண்மையை நேருக்குநேரே கண்ட போது இராமசாமிக்கு கோபம் கோபமாக வந்தது. என்ன செய்வது!

ஒரு சத்திரத்தில் காவல்காரன் அவரை வெளியே பிடித்துத் தள்ளினான். சிறிது நேரத்தில் எச்சில் இலைகளை வீதியோரத்தில் கொண்டு வந்து போட்டார்கள். பசி தாங்க முடியாத நிலையில் எச்சில் இலைகளை நோக்கி ஒடினார். சம்மணம் டோட்டு உட்கார்ந்து கொண்டார். ஒவ்வொரு இலை பாக வழித்து சுவைத்துச் சாப்பிட்டார். ஈரோட்டுப் பெரும் செல்வரின் பிள்ளை காசியில் எச்சில் சோறு சாப்பிட்ட கதையைக் கேட்டால் ஒரு பக்கம் வேதனையாகவும். ஒரு பக்கம் சிரிப்பாகவும் இருக்கிறதல்லவா. தந்தையார் கோபித்துக் கொண்டால் உடனே வீட்டை விட்டுப் போகத்தான் வேண்டுமா?

எத்தனை நாளைக்கு எச்சில் சோறு சாப்பிட முடியும் தன்னைப் பார்த்தால் சாமியாராகத் தெரியவில்லை. அதனால் தான் மதிக்கமாட்டேன் என்கிறார்கள். இவ்வாறு நினைத்த இராமசாமி தலையை மொட்டை அடித்கக் கொண்டார். நெற்றியில் பட்டை அடித்துக் கொண்டார். உருத்திராட்சக் கொட்டைகளை கழுத்தில் கட்டிக் கொண்ட்ார். ஒரு செம்பைக் கையில் ஏந்தி கொண்டு பரதேசிப் பிச்சைக்காரனாக மாறினார். அப்படியும் வாழ்க்கை நடக்கவில்லை.

ஒருநாள் ஒரு சாமியார் மடத்தின் பக்கம்

25