பக்கம்:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தை பெரியார்

கணவருடன் சண்டை போடுபவர்கள் கூட சாப்பிட்ட பிறகு தான் செல்வார்கள்.

நாகம்மையாரின் விருந்தோம்பல் பண்பு. நாளடைவில் பெரியாரையும் திருத்திவிட்டது. பிற்காலத்தில் தன்னைத் தேடி வருபவர்களை உணவுண்ணச் செய்தே அனுப்புவார்.

இந்நூலாசிரியர் தம் இளமைக் காலத்தில் பெரியாரைக் காணச் சென்றார். நண்பகல் நேரமாக இருந்ததால், பெரியார் வற்புறுத்திச் சாப்பிடச் செய்தே அனுப்பினார்.

பெரியார் நாகம்மையாரை அறிவுக் கொள்கைக்கு மாற்றினார். நாகம்மையார் பெரியாரை அன்புக் கொள்கைக்கு மாற்றினார்.

ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு வாழ்ந்தனர். அதனால் அவர்கள் இல்லற வாழ்க்கை இன்ப வாழ்க்கையாக அமைந்தது.

பெரியார் சாமியார்
ஆனார்


திருமணம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஒடின. இராமசாமி நாகம்மை ஆகியோருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அய்ந்து மாதம் உயிரோடு இருந்தது. பிறகு இறந்து போயிற்று. அதன்பின் குழந்தையே பிறக்கவில்லை. அவருடைய குறும்புகள், முரட்டுத் தனமை அவரை விட்டுப் போகவில்லை. ஒருநாள் இராமசாமி முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்.

19