ஆத்திரேலிய மொழிகட்கும் தமிழுக்கும் உள்ள ஒப்புமை

விக்கிமூலம் இலிருந்து

தேவநேயப் பாவாணர் ஒப்பியன் மொழிநூலில் (நூல்-2), ஆத்திரேலிய மொழிகட்கும் தமிழுக்கும் உள்ள ஒப்புமைL.S.I. p. 14 என்ற தலைப்பில் வெளியிட்ட உரைகள் வருமாறு;-

  1. சகர வேறுபாடுகளும் மூச்சொலிகளு மில்லாமை.
  2. பின்னொட்டுச் சொற்களாலேயே பெரும்பாலும் புதுச் சொற்கள் ஆக்கப்படல்.
  3. ஆத்திரேலிய மொழிகளில் உயர்திணைப் பெயர்களும் அஃறிணைப் பெயர்களும் வேறுபடுத்தப் படாமை.
    முதுபழந் தமிழிலும் இங்ஙனமே யிருந்தது.
    கா: மண்வெட்டி, விறகுவெட்டி; சலிப்பான் (சல்லடை).
  4. 'அர்' பன்மையீறா யிருத்தல்.

தமிழர், முண்டர், நாகர், ஆத்திரேலியர் என்பவர் பண்டு ஓரினத்தாரா யிருந்ததாகத் தெரிகின்றது.

இலங்கையில் பண்டு வழங்கியது தமிழென்றும், ஈழநாட்டரசர்க்கு முடிநாகர் என்ற பேர் இருந்ததென்றும், முத்துத்தம்பிப் பிள்ளையவர்கள் 'செந்தமிழ்'ச் சுவடிகையில்(Magazine) எழுதியிருப்பது பொருத்தமானதே.

ஆத்திரேலியர் திராவிடரைப் பலவகையில் ஒத்திருப்பதாக மாந்தனூலார் கூறுகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடியினர் மொழியில் பல தமிழ் மொழி சொற்கள் உள்ளன. மானுடவியலாளர்களின் ஆய்வின் படி ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடியினர் ஆதித்தமிழர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.