பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ: 79

தருமசேனர் ஆனார். சேக்கிழார் “அந்நெறியில், புலன் சிறப்ப” என்று குறிக்கின்றார்.

பின்பு அவர், தம்மைத் தாக்கி வருத்திய சூலைநோய் செய்த துன்பத்தால் மருட்சி நீங்கினார்; திருவதிகைப் பெருமானை மருணtங்கிய தெருட்சி விளக்கும் பாக்களைப் பாடி நாவுக்கரசர் என்ற திருப்பெயரை எய்தினார்.

இத்திருப்பெயரையும் அரசரோ, சான்றோரோ, பொது மக்களோ இடவில்லை; வானொலியொன்று தெரிவித்தது, ‘நாவுக்கரசு என்று உலகேழினும் நின்நாமம் நயப்புற மன்னுக என்று யாவர்க்கும் வியப்புற மஞ்சுறை வானிடையே ஒரு வாய்மை எழுந்ததுவே” என்று வரலாறு கூறுகிறது. திருவதிகை யில் திலகவதியாரால் சைவராகிச் சிவபிரானைச் செந்தமிழாற் பாடவும் இது நிகழக் கண்ட மக்கள் பலரும் அவ்வானொலி கேட்டு வியப்பும் உவப்பும் மீதுார்ந்தனர் என்பது “யாவர்க்கும் வியப்பு உற மஞ்சுறை வான் இடையே ஒரு வாய்மை எழுந்தது” என்பதனால் தெளிவாகிறது.

இனி, நாவுக்கரசரை அப்பர் என்பது பெரு வழக்கு. நாவுக்கரசர் திருப்பூந்துருத்திக்குச் சென் றிருக்கையில், ஞானசம்பந்தர் பாண்டி நாட்டி னின்றும் அங்கு வந்தார். அவர் முத்துச் சிவிகை வருவது மரபு. பூந்துருத்தியெல்லையில் அவரை வரவேற்ற கூட்டத்துள் ஒருவராய் நாவுக்கரசரும் சென்று, சிவிகை சுமப்பாருடன் கலந்து அதனைத்