பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 { ஒளவை சு. துரைசாமி

இதனையே,

“நானாவித உருவால் நமையாள்வான்

நணுகாதார்

வானார் திரிபுர மூன்றெரி உண்ணச்சிலை

தொட்டான்

தேனார்ந்தெழுகதலிக்கனி

உண்பான் திகழ்மந்தி

மேனோக்கி நின்று இறங்கும் பொழில்

வேணுபுரம் இதுவே.

என்று பாடியருள்கின்றார்.

சிவபெருமானை நண்ணாது மாறுபட்ட திரிபுரத்தசுரர், தமது வலிமைச் செருக்காலாகிய முப்புரத்தே நின்று உயர்வு பெற்று இன் புற எண்ணினர்; திரிபுரம் அவர் செயற்கொடுமை பொறாது சிவனது நகைப்பிற் பிறந்த தீக்கிரையாகி வெந்து வீழ்ந்தது; அவர் செயலின் புலமையை மந்தியின் செயல் குறிப்பாய்ப் புலப்படுத்துவது பற்றி, கதலிக் கனியுண்டான் மந்தி தான் இருந்த மடலின் மென்மை நினையாது நிற்கவும், வாழைமடல் கீழ்நோக்கித் தாழ்வதுதானும் கீழே தரையில் வீழ்ந்து நீங்கும் காட்சியை உரைக்கின்றார்.

கடல் தான் கொள்ளக் கருதிச் சூழ்ந்தபோது, காழிநாகர் மேல் மேல் உயர்ந்த திறத்தை, இடத்தின் செயல் இடத்து நிகழ் பொருட்கும் உண்டென்னும் இயைபு தோன்றத் தான் தங்கிய தாமரை மலர் நீர்ப்