பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

சைவ சித்தாந்தம்

(சிவ வழிபாடு பண்டைநாளில் உலகில் பல இடங்களிலும் காணப்பட்டதாக ஆராய்ச்சி வல்லார் கூறுகின்றனர். அச்சிவ வழிபாடு இந்நாளில் சுருங்கித் தமிழ்நாட்டெல்லை யளவாக நிற்கிறது. அச்சிவத்தொடுதொடரப்பட்ட சமய உண்மையே சைவ சித்தாந்தமாகும். இச்சைவ சித்தாந்தத்தை எடுத்துரைக்கும் முதல் நூலாக இப்போதுள்ளது சிவஞானபோதமாகும். அச்சிவஞான போதப் பெருங்கடலின் நிலை கண்டுணர்ந்து, அதற்குப் பேருரைகண்டு, சைவ சித்தாந்தப் பெருந்தலைவராய்த் திகழ்ந்தவர் சிவஞான முனிவர் ஆவர். முப்பொருள் உண்மை கூறும் சைவ சித்தாந்தக் கருத்துள் இறைவன் உயிர் இயல்புகளை விளக்கிக் காட்டும் சிவஞான முனிவரின் தெளிவுரைகள் கட்டுரையகத்தே அழகு செய்து நிற்கின்றன.)

லிசிவ சித்தாந்தம் என்பது சைவருடைய சமய முடிவு என்று பொருள்தரும் சொற்றொடர். சைவர்