பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் ஆ 11

அமைத்து, அதனை உணர்ந்து இனிது ஒழுகச் செய்யும் முறையில் நல்ல தொண்டாற்றியிருக்கிறது. அந்த முதற் பொருளைப் பழந்தமிழர் கடவுள் என்றும் இயவுள் என்றும் வரும் இரண்டு சொற்களால் குறித்துள்ளனர். “கடவுள் வாழ்த்து”, “பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள்’ என்ற தொடர் மொழிகள் யாவரும் நன்கு அறிந்தன. கடவுள், இயவுள் என்ற சொற்கள் கடத்தல், இயக்குதல் என்ற பொருட்குரியன. அக்குள், விக்குள் என்றாற்போல இவையும் கடவுள் இயவுள் என்று இயலுவதால் உள்ளும் புறமும் கடந்து நிற்பது, இயக்கி நிற்பது என்று பொருள் பட்டுக் கடவுள் எனப்படும் முதற்பொருள் என்பது எல்லாப் பொருட்கும் உள்ளும் புறமும் கலந்து நின்று இயக்குவதும் அவற்றைக் கடந்து நின்று அவற்றின் செயல்முறை கட்கு ஆணை செலுத்துவதும் செய்தொழுகுவ என்ற கருத்தை உணர்த்துகின்றன. -

இக்கடவுட் கொள்கைக்கு நிலைக்களம் உயிரும் உலகமும் ஆகும். உலகமாவது “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம்” என்பது தொல்காப்பியம், சமயச் சூழ்நிலையில், “காலம் உலகம் உயிரே உடம்பே, பால் வரை தெய்வம் வினையே பூதம், ஞாயிறு திங்கள் சொல் என வரூஉம் ஆயிரைந்தும்” சிறந்த பொருள்களாக நிற்கின்றன. உயிர்கள் புல் பூடுகளாகிய ஒரறிவுயிர் முதல் மக்கள் ஈறாக ஆறு வகையாகப் பிரிகின்றன. இவ்வுயிர்கள்