பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 இ. ஒளவை சு. துரைசாமி

பொருள் அருளும் திறமும் நமக்குச் சமய குரவ

ரென்ற முறைமை தோன்ற,

“பொறிப்புலன்களைப் போக்கறுத்து உள்ளத்தை

நெறிப்படுத்து நினைப்பவர் சிந்தையுள் அறிப்புறும் ஆமதாயவன் ஏகம்பம் குறிப்பினாற் சென்று கூடித்தொழுதுமே” (162.4)

என்று நாவரசரே நவில்கின்றார்

இங்ஙனம் பொதுப்படக் கூறிய அப்பர் பெருமான், தனக்கு இறைவன் சிவநெறி அருளிய திறத்தை “நாயினும் கடைப்பட்டேனை நன்னெறி காட்டி ஆண்டாய்” என்று உரைக்கின்றார். நன்னெறி காட்டிய வகையையும் நாவுக்கரசர் தெரிவிக்காமல் விடுகின்றாரில்லை. நமது உயிர் இருள் செய்யும் மலம் கலந்து, அதன் வழித்தோன்றும் வினை செய்து இடர்ப்பட்டுத் தெளிவு பெறாது தடுமாறித் தியங்குவது இயல்பு; அதனைக் கெடுத்துச் சிவஞானத்தைச் சிவபெருமான் அருளுகின்றான் என்று உரைக்கலுற்று.

‘இருளாய உள்ளத்தின் இருளை நீக்கி, இடர்பாவம் கெடுத்து ஏழையேனை உய்யத்தெரு ளாய சிந்தைகளைத் தெருட்டித் தன்போல், சிவலோக நெறியறியச் சிந்தை தந்த அருளானை’ (268.4) என்று பாடுகின்றார். சிந்தையைத் தெருட்டியது எவ்வாறு? என இங்கே ஒருவாறு விளக்கப்படுகிறது. அதனைத் திருவெறும்பியூர்த்