பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ஒளவை சு. துரைசாமி

4. சிறிது தொலைவில் வடகிழக்கில் கடற்கரை யில், மேகம் தவழும் கோபுரமும் வனப்பு விளங்கும் மாளிகையும் கொண்ட மயேந்திரப் பள்ளி தோன்று கிறது. கடற்கரைக் கானற்சோலயில் கண்டலும் ைகதையும் கமல மலரும் பொருந்தி வாவியும் காணப்படுகின்றன. நேரிற் கண்டு இன்புறும் ஞானச் செல்வர்,

“கொண்டல் சேர் கோபுரம் கோலமார் மாளிகை கண்டலும் கைதையும்

கமலமார் வாவியும் வண்டுல்ாம் பொழிலணி

மயேந்திரப்பள்ளியிற் செண்டுசேர் விட்ையினான்

திருந்தடி பணிமினே

என்று இனிமை கெழும இசைக்கின்றார்.

ஊர்க்குள் கடல் தரு பவளமும் முத்தும்

மலைதந்த வயிரமணிகளும் அகிலும் பண்டமாற்று

கின்றன. செல்வ வாணிகம் திகழ்வது காண்பவர்,

“திரைதரு பவளமும்

சீர்திகழ் வயிரமும் கரைதரும் அகிலொடு

கனவளை புகுதரும் வரைவிலால் எயில்எய்த

மயேந்திரப் பள்ளியுள்