பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ல் ஒளவை சு. துரைசாமி

தொல்காப்பியமும் சங்க விலக்கியங்களும் பிறவுமாம், தொன்மைக் காலத்தில் தமிழ் இயல், இசை, கத்து என்று முப்பிரிவில் வைத்த ஆராயப்பெற்றது. இயற் பகுதிக்கு வேண்டும் உலக வழக்கும் செய்யுள் வழக்கும் பொருளாகக் கொண்டு தொல்காப்பியம் உண்டாயிற்று. இதற்குச் சிறப்புப் பாயிரம் கூறிய பனம்பாரனார் என்பவரும், தமிழ் கூறும் நல்லுல கத்து, வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் என்றே குறிக்கின்றார். ஏனை இசை, நாடகம் என்ற இரண்டன் இயல்புகளையும் தொல்காப்பியம் கூறுகின்றிலது. இதனால், தமிழின் தொன்மை நலம் காட்டற்குத் தொல்காப்பிய மொன்றே போது மென்பது நிரம்பாதென்று விளங்கும்.

இனிச் சங்க விலக்கியங்களும் சங்க காலத்து நிலவிய நூல்கள் அனைத்தையும் கொண்டுள்ளன வல்ல. எத்துணையோ நூல்கள் இறந்து போயின. கிடைத்தவை இப்போதுள்ளனவே. இவற்றால் அறியப்படும் தமிழ் நாகரிகம் முழுதும் அறியப்பட்ட தொன்றன்று. இவை, பொருளிலக்கணத் துறைக்கு அமைதியுடையவாய், பண்டைத் தமிழர் நாகரிகத்தை யுணர்தற்கு ஓரளவு கருவியாவனவாய், பண்டைத் தமிழரின் உலகியல் வாழ்விற்கமைந்த பண்பாட்டை யெடுத்தோதும் பெரு விளக்கங்களாய் நிலவுகின்றன. உலகியலோடு கலந்தும் கலவாமலும் செல்லும் சமய வுணர்வு கொளுத்தும் நூல்கள் தொல்காப்பியத்துக்கு முன்பேயிருந்தன என்றற்குச் சான்று இல்லாமல்