பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ஒளவை சு. துரைசாமி

நாட்டில் நெடுமாறனும் சமண்சமய வேந்தர்களாகத் திகழ்ந்தனர். ஏழாம் நூற்றாண்டில் நாவரசர், ஞானசம்பந்தர் என்ற இருவரும் தோன்றி, பண்டைச் சைவ சமயத்தைத் தமிழக முழுவதும் சென்று திரிந்து பரப்பி நிலைநாட்டுவாராயினர். நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், மீமாஞ்சை என்ற சமயங்களின் நற்கொள்கைகளுட் பல சைவத்தில் கலந்து கொண்டன. அடுத்து வந்த ஐந்து நூற்றாண்டு களுக்குள் தமிழகம் எங்கும் சைவமே மேலிடம் பெறுவதாயிற்று. பண்டைத் திருமால் வழிபாடும் ஒரளவு ஓங்குவதாயிற்று. மீமாஞ்சை சமயக் கலப்பால் நாட்டில் வேள்வி செய்தலும் மிகுவ தாயிற்று. நாவரசர் முதல் சேக்கிழார் ஈறாகவுள்ள சைவச் சான்றோர் நூல்கள் வேள்வி கேட்கும் செயல்கள் ஆங்காங்கு நிகழ்வதைக் குறிக்கின்றன. பெளத்தமும் சமணமும் ஒளி மறைந்ததற்குக் காரணம், அவற்றால் கண்டிக்கப்பட்ட கொலை வேள்விகள் ஒழியத் தலைப்பட்டது மொன்றாகும்.

இந்நிலையில் பத்தாம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் வந்த தமிழ் மன்னர்களும் பிற செல்வர்களும் கோயில்க்ளைப் பெருஞ்செல்வ நிலையங்களாக்கத் தலைப்பட்டனர். ஒருபால் கோயில்கள் கல்வி நிலையங்களாகவும் கலைக் கோயில்களாகவும் திகழ வேண்டுமென்ற கொள்கை தோன்றி உருப்படுவதாயிற்று. வடமொழிப் புலவர் பலர் பல்லவ வேந்தராலும் தமிழ் வேந்தர்களாலும்