பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 81

வாசகரும் பிறரும் சிவனை அப்பன் என்றும் அப்பா என்றும் வழங்குவராதலால் அது பொருந்தாது.

சிவபெருமானையும் நாவுக்கரசரையும் அப்பன் என்று கொள்வோமாயினும், சிவனை அப்பன் என்ற ஒருமைச் சொல்லும் நாவுக்கரசரை அப்பர் என உயர் சொற்கிளவியால் உரைப்பதும் மரபு.

சிவபரம்பொருள் கண்டற்கரியது. அதன் அருமையை, ‘ஒருத்தரால் அறியவொண்ணாத் திருவுருவுடைய சோதி” (23.2 என்றும், “அண்டமார் இருளுடு கடந்து உம்பர்

உண்டு போலும் ஒர் ஒண்சுடர் அச்சுடர் கண்டு இங்கு ஆர் அறிவார்” (211.2)

என்றும்

என்னிறம் என்று அமரர் பெரியார் இன்னம்தாம் அறியார்” (88.8)

என்றும் நம் அப்பர் அறிவிக்கின்றார். இங்கே ஒருத்தரால் என்ற விடத்துத் தொக்கிநிற்கும் உம்மையை விரித்து ஒருத்தராலும் எனக் கொள்ள வேண்டும். எத்துணையுயர்ந் தோராயினும் சிவன் காண்பதற்கு அரியவன் என்பது கருத்து. ஒருத்த ராலும் அறியவொண்ணானாயின், அவனை நினைத்தலும் அடைதற்கு முயலலும் வீண் அன்றோ எனின், காணாவாறு இருளில் மறைந்து கிடந்து ஒழியாது யாவரும் கண்டறிவதற்காகவே பேரொளி யாய்ப் பிறங்குகிறான் என்றதற்கே “திருவுருவுடைய

த.செ.6