பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 இ. ஒளவை சு. துரைசாமி

இம் மடங்களின் தலைவர்பால் ஞானவுரை கேட்டு மாணவரானது பெருஞ் சிறப்பெனக் கருதினர்; மாணவரான வேந்தர் சிலர் தம்மை மாணவரென் னாது புதல்வரெனவே கூறிக்கொண்டனர். சமயம் சிசேடம் நிருமாணம் எனப்படும் மூவகைத் தீக்கைகளையும் வேந்தர்கள் பெற்றனர். களசூரி கணபதி வேந்தன் தான் பெற்ற தீக்கை காரணமாகத் தன்னைத் தீக்கா குரவர்க்குப் புதல்வனாகவே கூறிக்கொண்டான். பெருவேந்தர்களை அடி யொற்றிக் குறுநிலத் தலைவர்களும் இவ்வாறு சிவதீக்கை பெற்ற “ஞானப் புதல்வர்களாய்” விளங்கினர். சிவதீக்கை செய்து சிவதன்மங்களை அருளிய சிவாச்சாரியர் பலர் வேந்தர்கட்கு “ராஜ குரு’ வாக இருந்தனர். சிவாச்சாரியர்களைச் சிவமென்றே கருதி வழிபட்டனர். இராசாதிராசன் காலத்தில் திருவொற்றியூரில் பெரியதோர் சைவமடம் இருந்தது. அதற்குத் தலைவர் சதுரானை பண்டிதர்; அதனால் அது சதுரானை பண்டிதர் மடம் என்று பெயர் பெற்றது. அதன்கண் சிவாகமங்கள் மக்கட்கு உரைக்கப்பெற்றன. மடத்து ஆசிரியர் திருக்கோயில்களில் வியாகரணம் முதலிய கல்வி நெறிகளைக் கற்பித்தனர். இது கற்பிக்கும் மண்டபத்துக் வியாகரணதான மண்டபம் என்றும் பெயர். அம்மண்டபத்தில் திருவிழாக்காலங்களில் சதுரானை பண்டிதர் மடத்துச் சான்றோர், அங்கு வந்து கூடும் மக்களைத் தொகுத்துச் சமயச்