பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 இ. ஒளவை சு. துரைசாமி

கீழ் அரங்கேற்றம் செய்யப்பெற்றது; திருவாரூர் மும்மணிக்கோவை திருவாரூரில் ஸ்ரீ சுந்தரமூர்த்திகள் கேட்க அரங்கேற்றம் செய்யப் பெற்றது; திருக்கயிலாய ஞானவுலா திருக்கயிலாயத்தே சிவபரம்பொருளின் திருமுன் அரங்கேற்றம் செய்யப்பெற்றது. இவற்றின் நலம் காண்பதற்கு முன், நாம் இவற்றைச் செய்த ஆசிரியராகிய சேரமான் பெருமாளின் மனப் பான்மையைத் தெரிந்துகொள்வது நலமாகும். சான்றோர் செய்த நூல் நலம் காணப்புகுவோர் முதற்கண் அந்நூலைச் செய்த அச்சான்றோர் மனப் பான்மையைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று பெரியோர் கூறுவர்.

நூலாசிரியன் மனப்பான்மையை யுணர்தற்கு இருவகைக் கருவிகள் உண்டு. அவை அகக்கருவி, புறக்கருவி என்பன. அகக் கருவி அவர் செய்த நூலும், புறக்கருவி அவர் வரலாறுமாகும். நம் நாட்டுச் சான்றோர்களுள் பலருடைய மனக்கோளையறி தற்குப் புறக்கருவி போதிய அளவு கிடைப்பதில்லை. அகக்கருவியே பெரும்பாலும் கிடைப்பது. அதனால், நாம் அச் சான்றோர்களின் மனப்பான்மைகளுள் ஒரு பகுதியே காண முடிகிறது. மிகச் சிலர்க்கே இரு கருவிகளும் அமைந்திருக்கின்றன. அச் சிலருள் நம் சேரமான் பெருமாள் அருட்கருத்தை இருவகைக் கருவிகளையும் கொண்டு காண்பது இயல்கிறது.

புறக்கருவியாகிய இவரது வரலாறு தெய்வக் கவிநலம் சிறந்த சான்றோரால் செப்பமாக நமக்கு