பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 45

துக்கும் நிலைக்கும் உரியவற்றைச் செய்ய முற்பட் வேண்டும். தாழ்வெனும் தன்மையோடும் சைவமாம் சமயம் சாரும், ஊழ் என்று அருணந்தி சிவனார் கூறியது நல்லறிவைப் பொருளற்ற மடமைக்கு அடிமையாக்கும் தன்மையன் றென்பது சைவரறியாத

சைவம் என்பது சிவத்தோடு தொடர்பு கூட்டும் சமயமாகும். சைவம் சிவத்தோடு சம்பந்தமாவது என்று திருமூலரும் கூறினர். ஆகவே, சிவத்தை வழிபடும் சமயம் சைவமென்பது விளங்கும். இச்சிவ வழிபாடு எக்காலத்திற் றோன்றியதென்று அறுதி யிட்டுக் கூற முடியவில்லை. மோகெஞ்சதாரோ, அரப்பா முதலிய இடங்களிலும் சிவ வழிபாடு காணப்படுதலால், இப்போதைக்கு ஐயாயிர மாண்டுகட்கு முன்னும் சிவ வழிபாடு இருந்ததென்று அறிகின்றோம். - -

இனி, நம் தமிழகத்தில் சிவ வழிபாடே மிக்கிருக் கிறது. செல்வத்தாலும் சிறப்பாலும் மேன்மையுற்றுத் திகழ்வன சிவன் கோயில்களே. இதனால் தமிழுலகம் சைவ வுலகம் என்றும், சைவ வுலகம் தமிழுலகம் என்றும் ஒற்றுமை நயம்படக் கூறும் மரபும் உண்டாகியிருக்கிறது. சைவமும் தமிழும் வாழ்க என்று மக்கள் கூறுவதும் இக் கருத்தை அடிப்படை யாகக் கொண்டிருப்பதை யறியலாம். -

தமிழகத்தின் தொன்மை நிலையைக் காண் டற்கு இப்போது துணை செய்யும் தமிழ் நூல்கள்