பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 ஒளவை சு. துரைசாமி

துரய செயலாகவும் தோன்றி நம் அறிவைப் பணி கொள்கிறது.

நகர்ப்புறத்தே தோன்றும் காட்சிகள் பல இருக்க, கமல வண்டு தாதும் காட்சி எடுத்தோதப் பட்டதற்குக் காரணம், அம்பலத்தாடும் இறையருள் தேனாகவும் அதனையுண்டு பாடும் நான்மறையாளர் வண்டாக வும் தோன்றுவதே என்பார், “மன்றுளாடுமது. மருங்கே” என்றார்.

புறக் காட்சி அகத்தே நிகழும் அருணிலையை நினைப்பித்தலால், ஆரூரர் சிந்தையில் அன்பு பெருகிக் குழைந்து வடக்கு வாயிலை அடைகின்றார். வாயில்கள் நான்கும் நாற்றிசையை விளக்க, கொடிகளிற் கட்டிய மணி நாவொலி மறைமுழக்கம் போன்று ஒலிக்க நான் முகந்தோறும் மறையோதும் நான்முகன் போல்வது கண்டு அயன் பொன். வாயில்கள்” என்று உரைக்கின்றார்.

வடதிருவாயிலை எய்தியதும் அவரைத் தில்லை வாழ் அடியார்கள் வணங்கி எதிர் கொண்டனர்; சுந்தரரும் அவர்களை வணங்கி மகிழ்ந்தார். இவ்விரு திறத்தாருள் தொண்டர் முன் வணங்கினரா? ஆரூரர் வணங்கினரா? என்றோர் ஐயம் இங்கே எழும்; அதனை நீக்கக் கருதிய சேக்கிழார், “அடியார் அவர்களோ நம்பி ஆரூரர் தாமோ முன்பு இறைஞ்சினர் யாவர் என்று அறியாமுறைமையால் எதிர் வணங்கி மகிழ்ந்தனர்” என்று உரைக்கின்றார்.