பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 இ ஒளவை சு. துரைசாமி

ஆதலின் அதற்கு நன்றி செலுத்தல் முறைமையன்று என்று கருதிய கவிஞர், அவன்பால் வேண்டும் விண்ணப்பத்தைப் பாருங்கள்!

“ஆயும் பழைய அடியாருடன் கூட்டித் தோயும் பரபோகம் துய்ப்பித்துச்-சேய கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி யாட்கொண்டு அடியேற்கு முன்னின் றருள்”

குமரகுருபரர் தம் காலத்துச் சமயநிலை, மொழிநிலை, ஆட்சிநிலை இவைகளையெல்லாம் அறிவிக்கும் நோக்குடன் அழகிய பாக்களைத் தம் நூல்களில் இடையிடையே தந்துள்ளார். எடுத்துக் காட்டாக ஒரு பாட்டைக் காண்போம்.

ஆங்கிலேயர் நம் நாட்டில் புகத் தலைப் பட்டார்கள். புறச் சமயக் கொள்கைகளை மக்கள் உள்ளத்தில் புகட்டினர். மதுரையில் தோன்றிய சிவாகமங்களும் செந்தமிழ் இலக்கியங்களும் அழிந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. கீழ்நாடு, மேல் நாட்டினர் ஆட்சிக்குட்பட்டுவிடுமோ என்ற பயம் மக்களிடையே எழுந்தது. களப்பிரர் என்னும் கலிப்பகைஞர் தமிழ்நாட்டைக் கைப்பற்ற முயன்ற னர். மறச்செயல்கள் நாட்டில் தாண்டவமாடத் தலைப்பட்டன. தமிழ் மன்னரின் அரசியலும் பெருங் குடியும் அழியத் தழைப்பட்டன. தமிழ் மன்னர் மூவருள் தலைசிறந்து விளங்கிய பாண்டியர், சோழருக்கொப்பாவர் என்று உணராதாரும் ஒத முற்பட்டனர். இத்தகைய கேடுகள் எல்லாம்