பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 ல் ஒளவை சு. துரைசாமி

“கொங்கு தங்குங்குஞ்சி கூடாப்பருவத்துக் குன்றவில்லி

பங்குதங்கும் மங்கை தன்னருள் பெற்றவன் பைம்புணரிப்

பொங்குவங்கப் புனல் சேர்த்த புதுமணற்

புன்னையின்கீழ்ச்

சங்கு தங்கும் வயல் சண்பையர் காவலன் சம்பந்தனே’ என்றும் பாராட்டி யுரைக்கின்றார். --

பட்டினத்தடிகள், ஞானசம்பந்தப் பெருமானது இச்செயலையே வியந்து, தாம் பாடிய திருக்கழுமல. மும்மணிக்கோவையில்,

“தாதையொடு வந்த வேதியச் சிறுவன் தளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்த - அன்னாயோ என்று அழைப்ப முன்நின்று

ஞானபோகத் தருளட்டிக் குழைத்த ஆனாத் திரளை யவன்வயின் அருள, அந்தணன் முனிந்து தந்தார் யார் என அவனைக் காட்டுவன், அப்ப, வானார் தோஓடுடைய செவியன் என்றும் பிஇடுடைய பெம்மான் என்றும் கையிற் சுட்டிக்காட்ட ஐய நீ வெளிப்பட்டருளினை யாங்கே”

என்று உரைக்கின்றார். ------

- இவ்வண்ணமே சம்பந்தர் கோலக்காவில் தாளம்பெற்ற செய்தியைப் பாராட்டியுரைப்பவர். அவர் திருவாயால் பாட்டிசைப்பக் கையால் தாளம் போடுவது கண்ட பரமன், அவர் கைநொந்திடு