பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 ஆ ஒளவை சு. துரைசாமி

கரும்பமருங் குழல்மடவார் கடைக்க ணோக்கிற்

றுளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப்

பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

இதன் கண் துறந்தோர் இயல்பு கூறி அவர் கட்குப் பெரும்பயன் நல்கும் திறம் கூறப்படுகிறது.

காரானை யிருரிவைப் போர்வை யானைக் காமருபூங் கச்சியே கம்பன்றன்னை ஆரேனு மடியவர்கட் கணியான் றன்னை

யமரர்களுக் கறிவரிய வளவிலானைப் பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்

பயில்கின்ற பரஞ்சுடரைப் பரணை யெண்ணில் பேரானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

இதன்கண் அடியவர் எத்திறத்தாராயினும் அவர்க்கு அணியனாய் அருளுவதும், அமுதுண்டு செய்வினையின்றி வாழும் தேவர் அறிவுக்கு அளக்க வொண்ணாமையும், பாரும் விண்ணும் பரவ நட்டம் புரிவதும் கூறப்படுகின்றன. இறைவனுடைய குணஞ் செயல்கள் எண்ணிறந்தன வாகலின் அவன் எண்ணில் பேரான் எனப்படுகின்றான்.

முற்றாத பால்மதியஞ் சூடி னானை

மூவுலகுத் தானாய முதல்வன் றன்னைச்

செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் றன்னைத்

திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்