பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ. 141

6. உள்ளமே, என்னை உய்த்து ஆடித் திரியாதே; ஊன்கண்ணோட்டம் ஒழி.

ஊனுடம்பின் நிலையாமை கண்டு இரங்கி அதனை நிலையுமாறு பண்ணும் நினைவு செயல் களில் ஈடுபடுதலை யொழிக.

7. மூவாயிரவர்க்கு மூர்த்தியென்னப்பட்ட வனும் பத்திபாவிப்பார் பாவமும் வினையும் கெடுத்த வனும் இராவணனை அடர்த்தவனுமாகிய புலியூர்ப் பெருமானைத் தலைவனாகப் பெற்றாம்.

8. கல்குழையுமாறன்றி மெல்லக் கருதக்கூடிய வர்க்கு எற்றாலும் குறைவில்லையென்பர்; புலியூர்ப் பெருமாளைத் தலைவனாகப் பெற்றமையால் அவன் நம்மைத் தடுத்தாட் கொள்வான்.

கல்கனியக் குழைதல் மிக்க அனபுடையார்க்கே அமையும்; நமக்கு ஆகாதுதான்; ஆயினும் நாம் கருது மளவில் கருதினால் அதுவே போதும்; எத்துணைச் சிறிதாயினும் குறைவில்லை என்று சிவஞானச் செல்வர் கூறுவர்; அது பற்றிக் கவலற்க.

9. இறைவன் நாடுடைய நாதன்; அவன்பால், மனமே, நீ நன்று என்றும் செய்வாயாக, தருமன் தமரிடமிருந்து தடுத்தாட் கொள்வான். பெரு மானைப் பெற்றாமாதலால்,

தாடுடைய தருமன், தாவடியிட்டுச் செல்லு தலையுடைய நமன். ஒரு தாவடிதாட்டு எனப்படும். தாட்டு தாடு எனவந்தது. தாடு, வலிமையுமாம்.