பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 ஆ ஒளவை சு. துரைசாமி

இனி, வண்ணான் தோற்றத்தைக் கண்டு அடியார் வேடம் எனக் கருதியதில் இருந்தே இவர்க்கு அடியார்பால் இருந்த அன்பின் மிகுதி நன்கு தெரிகிறது; ஆயினும் நம்பியாரூரர் பொருட்டுப் பரமன் சிலம்போசை தாழ்த்தது தெரிந்ததும், பரமன் அடியவர்.பால் கொள்ளும் அன்பின் திறம் பெரிதும் விளங்கிவிடுகிறது. அப்போது இவர், நம்பியாரூரரைத் தாமும் கண்டு பணியவேண்டுமென்று வேட்கை கொள்கின்றார், “என்னே அடியார்க்கு இவர் அருளும் கருணை யிருந்தவாறு” என்று வியப்புண்டா கிறது. அதனால் அடியார் இணக்கம் தமக்குப் பேரின்பம் தரும் என்பது தெளிவாகிறது. / குறித்துத் திருவாரூர் நோக்கி வருபவர் தில்லையம்பதி வந்து, சிவபரம்பொருளைக் கண்டு பேரின்பெய்து கின்றார். அங்கே தங்கியிருக்கையில் தமது நினைவு செயல் சொல் முழுதும் சிவ பரம்பொருளிடத்தே ஒன்றி நிற்பது உணர்ந்து பொன்வண்ணத் தந்தாதியைப் பாடியருளி அரங்கேற்றுகின்றார். அதன்கண் தம் கருவி கரணங்கள் சிவமயமாதலை உணர்ந்து, எடுத்து எடுப்பிலேயே, “தன்னைக் கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கு, பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ் வண்ணம் மேனி பொலிந்திலங்கும்” என்று புகலுகின்றார். மேலும், தாம் நம்பியாரூரர் என்னும் பெருந் தொண்டரைக் காண வந்திருக்கும் நினைவு நூன்முடிவில் எழ, அவர் காட்சி தமக்குச்