பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 ஒளவை சு. துரைசாமி

முக்கண னென்பது முத்தீ வேள்வியில் தொக்க தென்னிடை யென்பதோர் சுருக்கே வேத மான்மறி யேந்துதல் மற்றதன் நாதம் நானென நவிற்று மாறே மூவிலை யொருதாட் சூல மேந்துதல் மூவரும் யானென மொழிந்த வாறே எண்வகை மூர்த்தி யென்பதிவ் வுலகினில் உண்மை யானென வுணர்த்திய வாறே (ஒற்றி. 6)

என மொழிந்தருளுகின்றார்.

இனி, சிவநெறி பேணும் சைவர்களுக்குத் திருநீறும் திருவைந் தெழுத்தும் திருவக்கமணி மாலையும் சாதனங்களாகக் கூறுவர். இவற்றைப் பொருளெனக் கொள்ளாதார்க்குப் பிறவியினின்றும் வீடு பேறு கிடையா தென்பர். இதனை, பிறவி நோய், “மாறும்படிக்கு மருந்துளதோ சண்பை வாணர் கொண்ட, நீறும் திருவெழுத் தோரைந்தும் கண்டியும் நித்த நித்தம், தேறும் பொருளென் றுணராத மாயச் செருக்கினர்க்கே (கழுமல. 2) என்றும், பெருவேந்த ராயினும், நன்னிறு நுதற் கிலரேல், என்றும் அரசும் முரசும் பொலியா இரு நிலத்தே (திருவேகம்ப திருவந் 30) என்றும், காணிர் கதி யொன்றும் கல்லீ ரெழுத்தஞ்சும் (திருவிடை. 12) என்றும் சிறப்பித் தோதுகின்றார். -

இச் சாதனங்களைப் பொருளாகக் கொண் டவர் சிவபெருமானை அகத்தும் புறத்தும் வழிபடும் இயல்பினராவர். புற வழிபாடு திருக் கோயிலில்