பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ: 19

யுடையவனாதலால் சிவலோகன் என்றும் செப்பு கின்றார்.

3. கட்டும்.உய்வனோ இதன்கண், யாரும் விரும்பாத இடுகாட்டில் விரும்பிக் கையில் எரியேந்தி ஆடும் பரமன், சிட்டர் விரும்பும் சிற்றம்பலத்தும் கூத்தாடுவன் என்கிறார். எட்டனைப் பொழுது, எள்ளத்தனைச் சிறுபோது.

4. மாணி.உய்வனோ இதன்கண், பால்கறந்து ஆட்டிய மாணியாகிய சண்டேசுரர்க்கு உலகமெல்லாம் ஆளும் திருவை நல்கியது குறிக்கின்றார். நீருலகம், நீணுலகம், ஆணி “உழுவார் உலகத்தார்க்கு ஆணி’ என்றாற் போல,

5. பித்தனை.உய்வனோ

இதன்கண் பெருங்காடு அரங்காக உடையனா யினும் யாவர்க்கும் முத்தியளிக்கும் முதல்வன் என்றற்கு முத்தனை என்றும், யாவர், சித்தத்துள்ளும் சிறக்க இருத்தலால் சித்தன் என்றும், அவனுக்கும் உயிர்கட்கும் உள்ள தொடர்பு தந்தைக்கும் மகற்கும் உள்ளதாம் என்றற்கு அத்தன் என்றும் கூறுகிறார்.

6 நீதியை.உய்வனோ

இதன்கண் எங்கும் நீக்கமற நிறைந்திருக்குமாறு விளங்க நிறைவை என்றும், இன்னதன்மையன் என்று அறிவொண்ணாமை பற்றி ஒருவர்க்கும் அறிவொண் ணான் என்றும், அவன் அருளால் அறியலுறுவார்க்கு அருட்பேர் ஒளியாய்த் தோன்றலின் சோதியை