பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 இ. ஒளவை சு. துரைசாமி

செல்வ வாழ்வு பெறுவோர் அதற்காக முயலும் பல்வேறு முயற்சிகளையும் நிரல்படக் கோத் துரைப்பதில் பிள்ளையார் நிகரின்றிப் பிறங்கு கின்றார். நிலத்தை உழுதுவிதை விதைத்துக் கார் வருமென்று விண்பார்த்திருப்பதும், கிளைஞர்களைப் பிரிந்து பொருள் வயிற் சேறலும், போருடற்றுவதும், கடலில் ஏந்திரம் கடாவிற் குன்று பார்த்து வங்கம் செலுத்துவதும், வேந்தர்க்குச் சோற்றுக் கடன் பூண்பதும், வேறு பல தொழிலில் முயல்வதும், வாட் போர் செய்வதும், அறியாதார்க்கு அறிவு கொளுத்துவதும், சொற் போர் செய்வதும், பாக்கள் புனைவதும், சொற்பொழிவு செய்வதும் கோயில். 20) மக்கள் செயல்களாகும் இவ்வாறு ஈட்டப் பட்ட செல்வம் நிலையின்றிக் கெடுவதையும் நன்கு கண்டு, ‘கண்டன மறையும் உண்டன மலமாம், பூசின மாசாம் புணர்ந்தன பிரியும், நிறைந்தன குறையும் உயர்ந்தன பணியும், பிறந்தன இறக்கும் பெரியன சிறுக்கும், ஒன்றொன்றொருவழி நில்லா என்றும், செல்வம் கல்வி கொடை படை குலம் முதலிய வற்றால் உயர்ந்தவர்களும் இறந்தொழியக் கண்டு, செல்வமொடு பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர், கல்வியிற் சிறந்தோர் கடுந்திறன் மிகுந்தோர், கொடையிற் பொலிந்தோர் படையிற் பயின்றோர் குலத்தி னுயர்ந்தோர் நலத்தினின் வந்தோர், எனையர் எக்குலத்தினர் இறந்தோர் அனையவர், பேரும் நின்றில’ (கோயில். 28) என்றும் உரைக் கின்றார்.