பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 இ. ஒளவை சு. துரைசாமி

எல்லையாதல் தோன்றத் திருத்தமாம் தில்லை எனப்பட்டது. எதுகை நோக்கி பெருமானது கூத்து திருத்தம் எனப்பட்டது. காணும் அவாமிகுதியால் நேர்பட வந்தவாறு என்றார்.

யான் வந்த காரணத்தைக் கேட்குமுறையில் என்னை நின்வாய் திறந்து கேட்பாயாகில் என்பார் . “கேட்குமா கேட்டியாகில்” என்றார். என்று வந்தாய் என்று கேட்பது போலப் பெருமானது திருக்குறிப்பு இருந்தமையின், இவ்வாறு கூறினார் என்றலும் ஒன்று. அதற்கு விடை கூறும் நாவுக்கரசர், நினது உமையாள் காண ஆடும் நலமும் அதனிடைச் சுரக்கும் இன்பத்தையும் நான் ஒருவரும் கூறக் கேட்டதில்லை; ஏனெனில், யான் என்கிளைகளாக இருந்த சமன் சான்றோர் குழலினின்றும் பிரிந்த தில்லை என்பார், “கேட்டிலேன் கிளைபிரிவேன்” என்றும், பின்னர் நின் திருவருள் வாய்த்தமையின், நின் திருவடியை நெஞ்சில் நிலைபெறக் கொண்டேனாக திருக்கூத்துக் காணும் வேட்கை எழுதலால் நான் வந்தேன் என்றற்கு, “நாட்டினேன்.நெஞ்சினுள்ளே.ஆடுமாறு”

என்றார்.

ஒன்றைச் செய்யுமிடத்துச் சிறிது நேரம் அதன்கண் ஒன்றி நிற்பதும் இடையீடுபட்ட வழித் திகைத்துப் பிறிதொன்றைப் பற்றிச் செல்வதும் மனத்துக்கு இயல்பு. அவ்வாறின்றி மேற்கொண்ட நின் திருவடிக்குரிய பணியை என் சிந்தை கலக்கறாது செறிவுடன் செய்தற்கு நீ அருகுதுல் வேண்டும் என்று