பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 ஒளவை சு. துரைசாமி

சங்கரர் - சிவபெருமான். சங்கரன் - எல் வுயிர்க்கும் சுகத்தைச்செய்பவன். சிவபரம் பொருட்குச் செய்யப்படும் திருப்பணிகளுள் தொன்றுதொட்டுவந்த அருச்சனை முதலிய வழிபாடுகள் சிறந்தவையாதலின், முன்வந்த அருச்சனை வழிபாடு” என்றார். பிள்ளையார் இக் கருத்தினைப் பல பதிகங்களில் ‘இருபொழுதும் பூவினைக் கொய்து மலரடி போற்றுதும்”, “பத்தி மலர் துரவ முத்தியாகுமே, “கரும்பார் மலர் இண்டைகட்டி வழிபாடு செய்யுமிடம்” என்பன முதலிய பல திருவாக்குக்களால் எடுத்தோதுதலைக் காணலாம்.

திருமுழுக்குக்கு வேண்டும் நெய்யும் பாலும் தயிரும் முதலிய வைந்தும் தருவதுடன் அருச்சனைக் குரிய திருநீறும் தருவதால் அருச்சனை வழிபாடு மன்ன ஆனினங்கள் வாழ்க என்று பிள்ளையார் அருளிச்செய்தாரென்றார்; ‘ஆனஞ்சாடும் முடி யானும் ஐயாறுடையடிகளே” என்று பிறாண்டும் பிள்ளையார் கூறுவதுடன், அருச்சனை வழி பாட்டிற்கு வேண்டியவற்றுள் பலவற்றை நல்கும் பண்புபற்றி, ஆவினையே பரமனாக உபசரித்து, “மணியே, ஆனே சிவனே அழுந்தையவர் எம்மானே யென மாமடம் மன்னினையே” (அழுந்துTர் 4 என்று உரைத்தருளுவது காண்க.

இதுகாறும் கூறியவாற்றால் பிள்ளையார் பாசுரத்தே அந்தணர் வாழ்க’ என்றது உலகம் இன்புறுதற்கும், வானவர் வாழ்க என்றது சந்த