பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 இ. ஒளவை சு. துரைசாமி

தார் நோக்கும், தன்தாரும் நோக்கும்; அவனுடைய ஏர்நோக்கும் தன்னது எழில் நோக்கும்; பேரருளான் தோள் நோக்கும் தன் தோளும் நோக்கும்; அவன் மார்பில் நீள் நோக்கம் வைத்து நெடி துயிர்த்து நாண் நோக்காது உள்ளம் உருக ஒழியாத வேட்கையாம் - வெள்ளத் திடைய முந்தி வெய்துயிர்த்தாள்.

இவட்குப் பின் மடந்தை யொருத்தி பரமன் அழகில் ஈடுபடுகின்றாள். அவளைத் “தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்திய சீர் வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள்.” என்று சேரமான் பெருமாள் சிறப்பிக் கின்றார். இவள் தோழியருடன் யாழிசைத்துப் பரமனது “மடல் வண்ணம்” பாடி மகிழ்கின்றாள். அக்காலை இறைவன் பவனிவரக் காண்கின்றாள். எண்ணம் அவன்பால் இயைகிறது.

“தன்னுருவம் பூங்கொன்றைத்தார் கொள்ளத்தான்

- கொன்றைப் பொன்னுருவம் கொண்டு புலம்புற்றாள்.”

பிறிதோரிடத்தே அரிவையொருத்தி, வீணை

யைப் பண்ணிப் பரமன்மேல் தமிழ்பாடத் தொடங்கு

கின்றாள். அக்காலையில் இறைவன் விடைமேல்

காட்சி தருகின்றான். அவள் கருத்து அழிகின்றது. தன்

தோழியரை நோக்கி, “பொன்னனையீர்,

இன்றன்றே காண்பது எழில் நலம், கொள்ளேனேல், நன்றன்றே பெண்மை நமக்கு"