பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 ஒளவை சு. துரைசாமி

இத்தகைய அருள்வள்ளல், தன்னைவிரும்பிப் பாடியவழி, அடியார் வினைப்பிணிப்புப் பறையச் செய்யும் எளிமையுடையன் என்பதனை,

“பூணற் பொறிகொள் அரவப் புன்சடை

கோணற் பிறையன் குழகன் கோலக்கா

மாணப் பாடி மறை வல்லானையே பேணப் பறையும் பிணிக ளானவே”

என்று கூறியருளுகின்றார். உயிர்களைப் பிணித்து நிற்றலின், வினைகளை ஈண்டு, “பிணிகளானவே” என்கின்றார். “பாடுவாரிசைப் பல்பொருட்பயன் உகந்தன்பால், கூடுவார் துணைக் கொண்டதம் பற்றறப் பற்றித், தேடுவார் பொருளானவன்” (தேவூர்) எனப் பிறிதோரிடத்து வெளிப்படையாகக் குறித் தருளுகின்றார்.

இங்ஙனம் பிணித்துக் கொண்டுநிற்கும் வினை களைத் தகர்க்கும் முறையினை அடுத்த பாசுரத்தில் மிகவருமையாகக் குறிக்கின்றார். பரமன் கையில் ஏந்தும் மழுப்படையின் வெம்மையாலும், மறி மானின் முழக்கத்தாலும் உயிரறிவைத் தழுவிப் பிணித்து நிற்கும் வினைகட்கு முதற்கண் தளர்ச்சி யெய்துகின்றதென்பார், - . . .

“தழுக்கொள் பாவம் தளர வேண்டுவீர், மழுக்கொள் செல்வன் மறிசேர் அங்கையான் குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே"