பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ஆ ஒளவை சு. துரைசாமி

கைத்தொழிற் சாலைகளும் பிறரும் பொதுவுடைமை யாதல் வேண்டுமெனும் கிளர்ச்சி தோன்றியுளது. சமுதாயத்தில் சாதி வேற்றுமையும் மக்களிடையே படிப்பின்மையும் இருத்தலாகாது; வாழ்க்கைக்கு இன்றியமையாத துறைகளில் எல்லாம் சாதி சமுதாய வேற்றுமைகளைப் புகுத்துதல் சமுதாய வளர்ச்சியைக் கெடுத்து நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கிறது: இவற்றைத் தொலைக்க வேண்டும்; ஒரு சாதி பிற சாதிகளை யடக்கி மேனிற்பதும் ஒதுக்கப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர் எந்நாளும் முறையே ஒதுக்கப் படுவதும் தாழ்த்தப்படுவதும் ஒழிய வேண்டும் என்பன போன்ற கிளர்ச்சிகள் எழுங்கள்ளன.

இந்நிலையில் சமயத் துறையல மாறுதல்களும் கிளர்ச்சிகளும் உண்டாகாமல் இல்லை. சமயங்களின் குறிகளாக விளங்கும் கோயில்கள் தூய்மையாலும் நற் செயல்களாலும் தெய்வ மணங்கமழ்வனவாதல் வேண்டும். தீயொழுக்கம், தீச்செயல், திநினைவு தோன்றுமிடங்கலாக நிற்பது தீதாகும். கோயிலுக் குரிய மிக்க செல்வங்கள் செவ்விய முறையில் பயன்படுதல் நன்று கோயிற் பாதுகாப்புப் பணி வாணிபமாக நடத்தல் அறமாகாது; கோயில்கள் சாதிகுல வேற்றுமைகட்கு இடமாய், அவற்றை வளர்த்து மக்களொருமைக்குக் கேடு விளைவிக்கும் தீய நிலையமாய் இருப்பது ஒழிய வேண்டும் என்பன போன்ற கிளர்ச்சிகள் எழுந்துள்ளன.